Monday, October 29, 2012

விளங்கா நவ சமூகம்


சரியாக  
சொல்லப்போனால் 
விளங்கவில்லை 
இந்த நவ சமூகத்தையும் அதன் மனிதர்களையும் 
மக்கள் வரியை சுரண்டி தின்று 
நாடாளுகிறது  மத்தியில் ஒரு  பெருச்சாளிக் கூட்டம் 
இலவச கறுப்புத் துணியை கண்ணில் கட்டி 
இருட்டில் தள்ளிவிட்டு 
கண்ணாம்பூச்சி  விளையாட்டு காட்டுது ஒரு மாநிலம் 
கூட்டுக் களவானிகளோ 
பங்கு சண்டையில் மும்முரமாய் 
இருப்பவன் இல்லாதவன் 
எவன்  எப்படி போனால் என்ன 
சுய அடையாள மதிமயக்கத்தில் ஒரு பெரும் கூட்டம் 
பெண் திரைக் கூத்தாடியின் 
அங்க ஆடையின் அளவுச் சர்ச்சைகள்  இளசு பெருசுகளில் 
சாயம் பூசிய திரை கூத்தாடிகளின் நாற்காலி ஆசை 
பல்லாக்கு தூக்கும் ரசிக பக்தர்கள் 
அவதார புருஷர்களின் 
மன்மத லீலைகளும் அரியணை நாடகங்களும் 
 பாடசாலைகளிலோ 
 கட்டாயக் கல்விபோய் அசூறக் கட்டணக் கல்விகள் 
எதிலும் புதுமை தேடும் நவ சமூகம் 
வேலியற்ற உறவு பந்தங்களின் நவ உறவுக் கலாச்சாரம் 
ஆம் குழந்தையில் கூட காமத் தேடல்கள் 
பத்துவயது குழந்தை கருவறையில் கூட சிசு
பந்த உறவு முறைகள் நாளை  ஏட்டில் மட்டுமே காணப்படலாம் 
நாளை  உழுது நெல்மணி விதைக்க 
காணி நிலம் கூட இல்லாமல் போகலாம் 
ஆம் நிலங்களில் நீண்டு முளைக்கும் கட்டிட சவங்கள்  
இருக்கும் இடத்தை சீர்கெடுத்து நரகமாக்கிவிட்டு 
எதோ ஒரு அண்டகோளத்தில் 
நீரைத் தேடி அலைகிறது ஒரு மட கூட்டம் 
வெறிபிடித்த மதமிழகிய யானைக்  கூட்டங்கள் ஒரு பக்கம் 
ஒரு தினத்தில் ஓராயிரம் கொண்டாட்டங்களுமாய் சில கூட்டம் 
உயிருக்கு ,உடமைக்கு ,உரிமைக்கு 
குரல் கொடுக்க தொடை நடுங்கிகள் கூட இல்லை 
நித்தம் விடிகிறது
என்றுதான் விடியுமோ இந்த இருண்ட சமூகம் 
ச்சீ ச்சீ ..என்ன கொடுமை 
இன்னும் விளங்கவில்லை  இந்த நவ சமூகத்தையும் அதன் மனிதர்களையும் 

7 comments:

 1. சமூகத்தின் உண்மை நிலை சொல்லிப்போகும்
  அருமையான கவிதை.
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. இலவசங்களை மறுத்து உழைப்பின் பரிசை மட்டும் அனுபவிக்க விரும்பும் உள்ளம் தோன்றும் வரை மாறப் போவதில்லை இந்தச் சமூகம். இதில் மன்னனும் கடைசி மனிதனும் அடக்கம்

  ReplyDelete
 3. இன்னும் விளங்கவில்லை இந்த நவ சமூகத்தையும் அதன் மனிதர்களையும்
  >>
  மனிதர்களை புரிஞ்சுக்கிட்டா வாழ்வின மீதான ரசனையே போய்விடுமே.

  ReplyDelete
 4. நெடு நாட்களுக்கு பிறகு உங்களின் கோபக்கணைகளை மீண்டும் உங்கள் பக்கத்தில் காண்கிறேன் நண்பா ..
  நெற்றி பொட்டில் அறைந்த வலி .. படித்த எனக்கும் தோன்றிற்று .. ஒவ்வொருவருக்கும் வலித்தால் நிச்சயம் இச்சமூகம் விடியலுடன் பிறக்கும் ... படைப்புக்கு என் உளம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்

  ReplyDelete
 5. புரியாத புதிராய் வாழ்க்கையும் மனிதர்களும்.

  ReplyDelete
 6. avalangalai adiththu solldeenga....

  ReplyDelete
 7. இன்றைய உண்மை நிலை - உங்கள் வரிகளில் தெரிகிறது... சற்று கோபமாக...

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...