Wednesday, October 3, 2012

முத்த முதலுரிமை




நம்  
செல்ல சண்டைக்கிடையில் 
 இதுவரை கொடுத்த முத்தத்தை
 திருப்பி கேட்கிறாய் நீ 

ஓ சரி 
முதலில் 
என் முத்தங்களை கொடு 
உன் முத்தங்களை 
தருகிறேன் என்றேன் நான் 

இல்லை 
அது சரிவராது என்கிறாய் நீ 
பெண்மைக்கு 
முதலுரிமை என்கிறேன் நான் 

முதலுரிமை 
முத்தத்திற்கு  மட்டும் தானோ என்று 
நகையாடுகிறாய் நீ 

மறு சொல்லுக்கு 
வார்த்தைகளற்று 
வாயடைத்து  நிற்கிறது 
என்னில் ஆண்...

8 comments:

  1. ஒரே 'இச்...இச்...' தானோ...?

    ரசிக்க வைத்தது...

    ReplyDelete
  2. ம்ம் நல்லா கொடுங்கோ ...

    ReplyDelete
  3. நல்ல சிந்தனை....

    நான்கு சுவற்றுக்குள் மட்டும்தான் பெண்ணுரிமை மதிக்கப்படுகிறது... ஆனால் சிறைக்குள் வாடும் அவர்களது மனது அந்த சிறைகளை விட்டு வெளியில் வருவதில்லை...


    //////
    முதலுரிமை
    முத்தத்திற்கு மட்டும் தானோ என்று
    நகையாடுகிறாய் நீ
    ///////

    சாட்டையடி வரிகள்...



    ReplyDelete
    Replies
    1. இதை நான் எதற்காக எழுதினேன் என்று
      மிகச் சரியாக புரிந்துகொண்ட என் அருமை தோழருக்கு
      என் நன்றிகள்

      Delete
  4. பெண்ணுரிமை இன்னும் ஏட்டளவில்தான் இருக்குன்னு உதட்டால சொல்லீட்டீங்க.

    ஆமா, ஒரே முத்த கவிதையா இருக்கே! என்ன சங்கதி?!

    ReplyDelete
  5. வாழைபழ ஊசி ... கவிதை கலக்கல் நண்பா

    ReplyDelete
  6. செல்ல சண்டைக்கிடையில்
    இதுவரை கொடுத்த முத்தத்தை
    திருப்பி கேட்கிறாய் நீ

    இப்படியெல்லாம் கூட சண்டை போடுவார்களா...?
    போடுங்க... போடுங்க...

    ReplyDelete
  7. உண்மைதானே அது.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...