Wednesday, October 31, 2012

திரைமறை உரையாடல்



முன்தினம் 
பெயர் இல்லாத ஒருவருடானான எழுத்துரையாடல்  
வணக்கம்  சொல்லபட்டது 
வணக்கத்தின் பாலினமும் திரை மறைவில் 
அடுத்த மறுநொடியில் 
தாங்கள் எழுதுவது கவிதையல்ல 
ஆம் நான் எழுதுவது கவிதையல்ல 
தாங்கள் ஒரு கவிஞனும் அல்ல 
உண்மைதான் நான் கவிஞனும் அல்ல 
தங்கள் எழுத்தில் கவித்துவம் இல்லை 
அது எனக்கு அவசிப்படவில்லை 
சிறு இடைவெளியும் 
மறு எழுத்திற்கான காத்திருப்பும் 
 புதுக்  கவிதை 
ஹைக்கூ 
மரபு 
.
.
.
.
இவையில் எதிலும் பொருந்தவில்லை 
தங்கள் கவிதைகள் 
என் எழுத்திற்கு இந்த ஆடைகளை இதுவரை  உடுத்தியதில்லை 
தாங்கள் ஒரு படைப்பாளியே அல்ல 
சற்று கோபமாகவும் வேகமாகவும் வந்தது அவ்வெழுத்துக்கள் 
ஆம் உண்மையான படைப்பாளி இறைவன் தான் 
அவன் படைத்ததை படைப்பதை 
அறிவை கொண்டு தேடும் சாதாரண மனிதர்களே நாம் 
ஆதலால் நான் படைப்பாளி அல்ல 
தங்கள் பெயரின் அர்த்தமென்ன 
அதற்கான அதற்தம் இதுவரை தேடவில்லை 
என் பெயரின் சுருக்கமே  என் பெயர் 
சொல்பிழை இருக்கிறது  தங்கள்  எழுத்துக்களில் 
இந்த உலகமே  பிழையில் தான் நகர்கிறது 
தாங்கள்  வாதம் செய்கிறீகள் 
இருக்கலாம் 
பச்சையாக கொச்சையாக இருக்கிறது தங்கள் எழுத்துக்கள் 
உண்மை வீச்சமுடையது 
சரி 
இவ்வளவும் கேட்டீர்கள் தாங்கள் யார் என்றேன் 
 சற்றென அணைந்துவிட்டது அவ(ளி) ரின் அடையாளம் 
யார் 
ஏன் 
எதற்கு 
நேற்று முழுவதும் எனக்குள் சக்கரமாய் சுழன்றது 
இந்தக் கேள்விகள் 
அந்த நபர் சொன்னதில் உண்ம்மை இருக்கலாம் 
அதை நான் திருத்திக் கொண்டால் 
நிச்சயமாக  இழப்பேன் 
என்னில் என் சுயத்தை
என்னையும் 
என் எழுத்தையும் எதிலும் அடையாள படுத்தாதவர் 
தன்னை அடையாள படுத்தாமல் சென்றது தான் நகைச்சுவை 

10 comments:

  1. உண்மைதான் நண்பா உணர்வுகளை வெளிபடுத்தினால் அதன் இயல்பில் உணர்வதை விட அதை ஏதாவது ஒரு பாத்திரத்தில் புகுத்தி ஒப்பிட்டு நோக்குவதே இவர்களின் வேலையாகி போனது அதற்காக நீங்கள் உங்கள் சுயத்தை ஒரு போதும் இழக்க வேண்டாம் .

    ReplyDelete
  2. தன்னை அடையாளப்படுத்த தைரியம் இல்லாதவரின் கேள்விகளுக்கு பதில் சொல்லவே தேவையில்லாதபோது மாற்றிக் கொள்வது குறித்து யோசிக்கவே வேண்டாம் தோழா.

    ReplyDelete
  3. மிக அருமையான பதிவு
    வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
    உங்கள் வரவை விரும்புகிறது.
    வாரம் இரு நட்சத்திர பதிவர்
    தினபதிவு திரட்டி

    ReplyDelete
  4. ஒவ்வொரு நபரின் எழுத்துக்கும் வேறுபாடு உள்ளது, ஒப்பிட்டு பார்ப்பது முறையல்ல. அவரவர் தோணியில் எழுதுவது அவரவர் சிறப்பு. நீங்கள் உங்களின் சாயலில் பயணம் செய்யுங்கள். அது தான் நிலைக்கும் உண்மையும் கூட..

    ReplyDelete
  5. மற்றவரைப் பற்றி சிந்திக்கவே வேண்டாம் நண்பரே...

    ReplyDelete
  6. நல்ல பதிவு. உண்மை கூறப்பட்டது.
    எதைப்பற்றியும் எண்ண வேண்டாம் சகோதரா
    செய்யதலி
    உமது வழியில் நீர் செல்லும்.
    ஒவ்வெருவருக்கும் ஒரு பாணி .
    அதில் உமது பாணி ஒரு ரகம்
    வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் உலகம்.
    பணி தொடர வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  7. மற்றவர்களைப் பற்றி சிந்திக்க வேண்டாமே!!!

    ReplyDelete
  8. விமர்சனங்கள் நம்மை செதுக்குபவையே/

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...