Monday, October 8, 2012

வானவில் ஆடை





உயிர் போர்த்தும் 
அன்பின் ஆடைகளில் பலவண்ணச் சாயங்கள் 
கருவில் உயிர் கொள்முன்னே 
நமக்கான ஆடைகளை நெய்கிறது உறவுகள் 
மரணத்திற்குப் பின் 
கழட்டப்ட்டு நினைவுகளில் பூசுகிறார்கள்  
காலப் பழக்கத்தில் 
வெளுத்து   உதிர்கிறது சில வண்ணங்கள் 
சில வண்ணங்கள் மட்டும் ஏனோ 
மரணம் வரை பற்றிப் பிடித்தபடி 
 உதிராத  வண்ணங்களை 
அடித்து துவைக்கிறோம் நம்பிகையற்று 
 துவைத்தலில்  விழும் கிழிசல்கள் 
 கிழிசல் விழுந்த 
ஆடை போர்த்திய மீத வாழ்க்கை 
மரணத்திற்கு பின்னும் நீளும்  அவமான  வடுக்கள் 

14 comments:

  1. வாவ் வாழ்க்கை ஆடை வானவில்

    ReplyDelete
  2. வலி தரும் கவிதை வரிகள் சகோ :( !!!!......
    பகிர்வுக்கு மிக்க நன்றி .

    ReplyDelete
  3. வாழ்வின் உண்மைகள்...

    மற்றும் தவிர்க்கமுடியாதவைகள்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் கவிஞரே ம் (;

      Delete
  4. தோழரே.... எப்படிங்க உங்களுக்கு
    இப்படி எல்லாம் யோசனை வருகிறது....!!

    வியக்கிறேன்.

    ReplyDelete
  5. வித்தியாசமான சிந்தனை வரிகள்...

    பல உண்மைகள்...

    ReplyDelete
  6. வண்ணாங்களை கொண்ட ஆடைகளை பற்றிய கவிதை நல்லா இருக்கு.

    ReplyDelete
  7. ''...மரணம் வரை பற்றிப் பிடித்தபடி
    உதிராத வண்ணங்களை
    அடித்து துவைக்கிறோம் நம்பிகையற்று ...''

    நல்ல வரிகள். அன்புடன் நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...