Wednesday, November 7, 2012

மீண்டும் சந்ததிக்கும் வரை
பயணங்களில் 
சொல்லிவிட்டு செல்லல் 
பாரதியரின் இல்லை தமிழரின் நல்பண்பு  
கடிகார ஓட்டத்திலிருந்து 
கொஞ்சமாய் இளைப்பாறல் 
மீண்டும் நாளையும் துரத்தும் 
ஓடித்தீர்த்தாகவேண்டி இருக்கு ஓட்டம்  முடியும்வரை 
நிரந்தரமாய் ஏதும் இல்லை 
சுழலும் இந்த வாழ்க்கை சக்கரத்தில் 
உறவுக்காக 
இல்லை அப்படி சொன்னால் அது பெரும் பொய் 
ஆம் சில பொய்களை சொல்லி 
அகத்தின் ஒரு பக்கத்தை இருட்டாக்குகிறோம் 
இது எல்லா மனிதர்களிடமும் தொடர்கிறது 
சிறை மீளும் போதுதான் 
அடிமையை தொலைந்த பருவத்தை உணர்கிறோம் 
இது திரை கடல் ஓடுபவர்களின் 
தலைமேல் சுற்றும் சாபம் 
அன்பு 
காதல்
நட்பு 
விரோதி 
விருப்பு ,வெறுப்பு 
புன்னகை, கண்ணீர் 
எல்லாத்திலும் கொஞ்சம் கொஞ்சம் 
ஆம் இதில் எதிலும் அளவு கடந்தால் 
அது உயிரோடு மரணத்தை ருசிப்பதாகும் 
விடுபடல் ,சுதந்திரம் 
அப்படி சொல்ல இயலாது இளைப்பாறல் ஆம் இதுதான் மெய் 

பசியில் அழுது 
முலைகுடிக்கும்  குழந்தை முகத்தில் 
கட்டிய சுருக்கு அவிழ்க்கையில் 
தாய் மடி தேடி ஒருவரும் கன்றின் முகத்தில் 
மாலை பள்ளி விட்டதும் 
மடைவெள்ளமாய் வீட்டுக்கு  ஓடும் குழந்தைகளின் முகத்தில் 
மண்ணை முத்தமிடும் மழையில் 
கரையை முத்தமிடும் அலைகளில் 
 இவைகளில் ஒரு பிம்பம் ஒளிரும் 
அது நான்தான் 

மீண்டும் சந்ததிக்கும் வரை 
என் அன்பின் உறவுகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் வணக்கங்கள் 

-செய்தாலி 

Tuesday, November 6, 2012

கிளைகளின் துக்கம்
வழக்கத்துக்கு மாறாக 
மும்மராமாய் சண்டையிட்டது 
காற்றுடன் அம்மரக் கிளைகள் 
எப்போதும் கொஞ்சி குளைபவர்கள் 
அதிசமாய் சண்டை போடுவதை 
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது 
அடுத்த மரத்திலுள்ள  கிளைகள் 
அக் கிளையோரக் கூட்டிற்கு திரும்பிய 
தாய்ப் பறவை ஒன்று சத்தமிட்டுக் கொண்டிருக்க 
 அடிச்ச காத்துல கீழ வ்ழுந்து உடைந்சிருச்சே 
உடைந்த முட்டையை நோக்கி  பரிதாபத்துடன்  ஒரு வழிப்போக்கன் 
குற்ற மனதோடு 
கெஞ்சிக் கொண்டிருந்தது காற்று 
சமாதானம் இன்றி இரவுவரை சலசலத்துக்   கொண்டே இருந்தது 
அம்மரத்தின் கிளைகள் 

Monday, November 5, 2012

புலப்படாத மாயை
அன்று 
யாருக்காகவோ வந்தவர்கள் 
என்னைப் பார்த்தது சிரித்தார்கள் ,கொஞ்சினார்கள் 
விழி திறந்த நானும் அழுதேன் சிரித்தேன் 
புலப்படவில்லை 
வந்தவர்களின்  உறவும் முகவும் 
அன்றுதான் பிறந்திருந்தேன் 
பிந்திய நாட்களில்
இடைவெளியிட்டு  
யார் யாருக்காகவோ 
வந்தார்கள் பார்த்தார்கள் சென்றார்கள் 
அதில் எனக்காக சிலரும் 
அப்போதும் சிரித்தேன் அழுதேன் 
ஆம் வந்தவர்களின் உறவும் அடையாளமும்  தெரிந்ததால் 
பின்னொரு நாளில் 
எனாக்காக மட்டுமே வருகிறது ஒரு பெரும் கூட்டம் 
இம்முறை சிரிப்பு ஒரு சிலரில் மட்டும் 
அதுவும் மௌனமாக 
ஆம் அவர்கள் என் மரணத்தை விரும்பி இருக்கலாம் 
ஒரு கூக்குரல் அழுகை சத்தங்கள் 
இங்கே உறவென்று சொல்லி  ஒரு கூட்டம் அழுகிறது 
எனக்கு நிச்சம் இல்லை  
எந்த விழிகளின் கண்ணீரில் 
என் பிரிவின் வலி இருக்கும் என்பதில் 
எனக்காக வந்தவர்கள் 
என்னோக்கி  சத்தாமாய் மௌனமாய் அழுகிறார்கள் 
அவர்களை நோக்கி 
சிரிக்கவும் அழவும் முடியாமல் 
ஆணவத்துடன் உறகுகிறேன் நான் 
இல்லை இல்லை உறக்குகிறான் அவன் 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...