Wednesday, November 7, 2012

மீண்டும் சந்ததிக்கும் வரை




பயணங்களில் 
சொல்லிவிட்டு செல்லல் 
பாரதியரின் இல்லை தமிழரின் நல்பண்பு  
கடிகார ஓட்டத்திலிருந்து 
கொஞ்சமாய் இளைப்பாறல் 
மீண்டும் நாளையும் துரத்தும் 
ஓடித்தீர்த்தாகவேண்டி இருக்கு ஓட்டம்  முடியும்வரை 
நிரந்தரமாய் ஏதும் இல்லை 
சுழலும் இந்த வாழ்க்கை சக்கரத்தில் 
உறவுக்காக 
இல்லை அப்படி சொன்னால் அது பெரும் பொய் 
ஆம் சில பொய்களை சொல்லி 
அகத்தின் ஒரு பக்கத்தை இருட்டாக்குகிறோம் 
இது எல்லா மனிதர்களிடமும் தொடர்கிறது 
சிறை மீளும் போதுதான் 
அடிமையை தொலைந்த பருவத்தை உணர்கிறோம் 
இது திரை கடல் ஓடுபவர்களின் 
தலைமேல் சுற்றும் சாபம் 
அன்பு 
காதல்
நட்பு 
விரோதி 
விருப்பு ,வெறுப்பு 
புன்னகை, கண்ணீர் 
எல்லாத்திலும் கொஞ்சம் கொஞ்சம் 
ஆம் இதில் எதிலும் அளவு கடந்தால் 
அது உயிரோடு மரணத்தை ருசிப்பதாகும் 
விடுபடல் ,சுதந்திரம் 
அப்படி சொல்ல இயலாது இளைப்பாறல் ஆம் இதுதான் மெய் 

பசியில் அழுது 
முலைகுடிக்கும்  குழந்தை முகத்தில் 
கட்டிய சுருக்கு அவிழ்க்கையில் 
தாய் மடி தேடி ஒருவரும் கன்றின் முகத்தில் 
மாலை பள்ளி விட்டதும் 
மடைவெள்ளமாய் வீட்டுக்கு  ஓடும் குழந்தைகளின் முகத்தில் 
மண்ணை முத்தமிடும் மழையில் 
கரையை முத்தமிடும் அலைகளில் 
 இவைகளில் ஒரு பிம்பம் ஒளிரும் 
அது நான்தான் 

மீண்டும் சந்ததிக்கும் வரை 
என் அன்பின் உறவுகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் வணக்கங்கள் 

-செய்தாலி 

16 comments:

  1. வாழ்க்கை ஒரு வட்டப்பாதையே
    மீண்டும் சந்திப்போம்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மீண்டும் நலமுடன் சிந்திப்போம்....

    ReplyDelete
  3. சென்று வென்று வருக
    தோழரே..
    காத்திருக்கிறோம்...

    ReplyDelete
  4. நலமுடன் வாருங்கள் அங்கிள்...

    மீண்டும் நலமுடன் சந்திக்க காத்துள்ளேன்.

    ReplyDelete
  5. காத்திருக்கிறோம் நண்பரே...

    ReplyDelete
  6. அன்பு நண்பரே இன்று தங்கள் பதிவை நன்றியோடு வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்

    http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_8.html

    நன்றி.

    ReplyDelete
  7. உங்கள் படைப்புகளுக்கு காத்திருப்போம்.

    ReplyDelete
  8. நலமுடன் வாருங்கள் தோழரே

    ReplyDelete
  9. இந்நாள் மலரும் திருநாள் போல்
    எந்நாளும் திகழ்ந்திடவே - நானும்
    எம்பெருமான் அருள்வேண்டி வாழ்த்திகிறேன்
    இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. இந்நாள் மலரும் திருநாள் போல்
    எந்நாளும் திகழ்ந்திடவே - நானும்
    எம்பெருமான் அருள்வேண்டி வாழ்த்திகிறேன்
    இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. இனிய பயணம், அனுபவங்கள் கிடைக்கட்டும். இறையருள் சேரட்டும்
    மீண்டும் சந்திக்கும் ஆவலில!....
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  12. மீண்டும் உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

    வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/6_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  13. அன்புடையீர்,

    வணக்கம்.

    தங்களின் வலைத்தளம் பற்றியும்
    தங்களின் ஓர் பதிவு பற்றியும் இன்று
    நம் “யுவராணி தமிழரசன்” அவர்களால்
    வலைச்சரத்தில் பெரிதும் பாராட்டிப்
    பேசப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளது.

    இணைப்பு இதோ:

    http://blogintamil.blogspot.in/2012/11/6_23.html

    இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.

    தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும்
    அன்பான வாழ்த்துகளும்.

    அன்புடன்
    வை.கோபாலகிருஷ்ணன்
    gopu1949.blogspot.in .

    ReplyDelete

  14. ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு
    01.01.2013
    kambane2007@yahoo.fr

    ReplyDelete
  15. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    ReplyDelete

  16. வணக்கம்!

    பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
    எங்கும் அளிக்கட்டும் ஈந்து!

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...