Sunday, September 29, 2013

தொட்டி மீன்கள்

 நாளை 
இறந்து மிதக்கும் 
தொட்டி மீன்கள் என்று 
சற்றென
வெறுமையை கீழிட்டு உடைத்து
சொல்முடிச்சிட்டு
அரை நாழிகைவரை
நெய்யத்தொடங்கிவிட்டான் நண்பன்
வெறுமையின் கனவீழ்ச்சியில்
நொறுங்கி விழுந்த
மனக் கண்ணாடியின் பிம்பத்தில்
நிறத்தில், குணத்தில்
உருவத்திலென
அக்கரைத் தொட்டியில்
நீந்திக் கொண்டிருந்தது மீன்கள்
சிதறிய சில்லுகளில் தேடிக்கொண்டிருந்தேன்
என் நிறசாயலுள்ள மீனை

Thursday, July 18, 2013

கர்மப்பிழைபாலையில் விதைத்த 
நெல்மணிகளாய் வாக்குறுதிகள் 
பருவகாலம் மறந்த 
உயிர்ப்பின் தவக் காத்திருப்புக்கள் 
விரக்கதியில் தூக்கிலேறிய 
நம்பிக்கையின் சடலத்தில் துர்நாற்றம் 
வாழ்க்கை வீதியில் 
சுவடு பிடரி இழைகிறது கர்மப்பிழைகள் 

Monday, July 8, 2013

சூரிய முடிச்சு
நெருப்பை 
உண்ணும் கதிரொளிகள் 
வீதி வெட்கையில் ரகசியமாய் 
ஈரங்கள் களவுபோவதாய் ஊர்பேச்சு 
அநாகரீகம் தேங்கிய 
காலக் குட்டையில் துர்நாற்றம் 

Tuesday, July 2, 2013

மரங்கள்*மரங்களை 
வரைந்து கொண்டிருந்தேன் 
மழையை தூவிச் சென்றது காற்று*தொப்பலாய் நனைந்ததில் 
 மேலாடை விலகியதறியாது 
வீதியில் நிற்கிறது வெட்கமில்ல மரங்கள் 
*கொலையுண்ட மரம் 
சலசலப்பு ஒப்பாரியில் 
சபித்தபடி பறந்தன பறவைகள் *காற்று
இறந்த வீதியில்
மௌன அஞ்சலி செய்கிறது மரங்கள் *வீதியோரங்களில் 
வெட்கையில் இறந்த  குழந்தைகளை 
மடியில் ஏந்தி நிற்கிறது தாய்மரங்கள் 

Wednesday, June 26, 2013

மழை

ஒரே ஈரமாய் இருக்கு 
இன்று அதிக வேலையோ யென்றேன் 
இரவில் பால்கனி பக்கமாய் வந்த 
வெண்ணிலாவிடம் 
நீ தானே 
அவளை பார்த்துவரச் சொன்னாய் 
அங்கு ஓரே மழை 
மேகம் தலை துவட்டிக் கொண்டிருக்க 
எதோ ஒரு குரலுக்கு 
இதோ வருகிறேன் யென்ரு வெண்ணிலா செல்ல 
மழையில் நனைந்தவளின்
கூந்தலின் ஈரத்தை
உயிரில் தெளித்துவிட்டுச் சென்றது
பின்னால் வந்த காற்று

-செய்தாலி

Sunday, June 23, 2013

நிழல்பிம்பம்விடுமுறையன்று 
மறுபூமி வீதியில் 
நடந்து கொண்டிருந்தேன் 
பின்னிலிருந்து 
இடுப்பை வளைத்து பிடித்தபடி 
மறை தழும்பை சொல்லி 
நீ அவன்தானே என்றான் 
ஊர் தெருக்களில் எப்போதோ 
கூடி விளையாடிய பால்ய நண்பன் 
என் நிழல்மரத்தில் 
எத்தனையோ இலைவுதிர்கள்
சற்று திகைத்துத்தான் போனேன்
அவனில் என் பால்யத்தின் முகம் பார்த்தபோது Monday, May 13, 2013

சஞ்சலனம்

நிலவையும் 
நட்சத்திரங்களையும் தின்று 
காற்றை விழுங்கி வயிறு பெருத்து 
அசைவற்று சுருண்டுகிடக்கும் கருநாகத்தின் 
கதகதப்பில் அயர்ந்த முன்னிரவில் 
சாத்தான் சன்னதியில் உல்சவ கொடியேற்றம் 

Sunday, May 12, 2013

பசியறிந்தவள்

அன்று 
வீட்டில் ஒரு விசேஷம் 
தடபுடலான சமையல்கள் 
மதிய பசியில் உறவுகளும் 
மேசையிலோ ஆவி பரத்திக்கொண்டு 
பரிமாறிய உணவுகள் 

எல்லாரும் வரட்டும் அப்பா 
எனக்கு பசிக்குது தம்பி 
அண்ணன் வரட்டும் நான் 
இப்பம் வந்திடுவான் அக்கா
இந்த பயல் எங்க போனான் பாட்டி
நீங்க சாபிடுங்க அவர் வருவார் மதினி

பசி தாங்கமாட்டான்
சாப்பாடு நேரத்தில்
வெளியில் அப்படி என்ன வேலையோ
சற்றே கோபமாய் முனுமுனுத்தபடி
திண்ணையில் இருந்து 
எழுந்து  
வெளிவாசலில் வந்து நின்று
வீதியை வெரித்து பார்த்துக் கொண்டிருந்தாள் ''அம்மா''

Wednesday, May 8, 2013

நீச்சல்

அருணாக் கயிற்றின் 
பிடிமுறுக்கில் 
சிறசலடித்த கிணற்றடி நீச்சல் 
காலம் தடிக்கி 
தவறி விழுந்த குளத்தில் 
கரைகள் தேடிய எதிர்நீச்சல்கள் 
அடித்து இழுத்து அசூர  வாய்பிளந்து
உள்வாங்கிய நதியோ  
சமுத்திரத்தின் மறுகரையில்  உமிழ்தபடி 
கரையில் கால் நனைத்துக்கொண்டே 
அக்கரையை  வெறித்துப் பார்க்கிறது 
உதிர்ந்து கொண்டிருக்கும் மிச்சப் பருவம் 

Wednesday, May 1, 2013

ஹெந்தம்அந்த இடத்தில் மட்டும் 
மூக்கில் விரல்முடிச்சிட்டு கடக்கிறார்கள் 
எதிரிலும் பின்னிலுமாய் என்னுடன் சிலர் 

வீதியின் மறுமுனையில் 
முன் தினங்களில் எப்போதோ 
விதி முடிந்து போன பூனை ஒன்று

புழுவறித்து சடலம் உமிழும்
நுர்நாற்ற வீச்சத்தில்
மனித நேயத்தின் ஹெந்தம்


-செய்தாலி

Tuesday, April 30, 2013

சாவி

நடுநிசிவரை 
அறையை தலைகீழ் கமிழ்த்தி  உதறி 
விளக்கணைத்த பிந்திய 
இரவில் எப்போதோ  
உறங்கிப் போயிருந்தேன் சலனச் சுமையோடு 
தலைமாட்டில்  இருந்து 
நகைத்தபடி யாரோ சிலர்
விருட்டேழுந்தேன் நேரம் தவறி இருந்தது 
மீண்டும் ஒரு முயற்ச்சியாய் 
குடியிருப்பச் சுற்றி   வட்டமிட்டது  விழியும் மனமும் 
ஒரு வேளை 
அங்கே விட்டிருக்கலாம் 
இல்லை.. இல்லை 
கைவிரலில் வீதிநெடுக நாட்டியமாடுவதால் 
தவறி விழுந்திருக்கலாம் 
குளித்து உடுத்தி 
அவசரமாய் கீழிறங்கி 
வீதியோரத்தில் விழிகளை மேயவிட்டு 
அலுவலகம் வரை மெல்ல நடந்தது மனசு 
இங்காவது இருக்க வேண்டும் 
பிரத்தைனையோடு அலுவலகம் நுழைந்தேன் 
நேற்று சாவியை மறந்திடீங்களா 
புன்சிரிப்போடு எதிர்நிற்கும் 
காவலாளியின் விரல்களில் 
தலைதாழ்த்தி நானித்தபடி சாவிக் கொத்துக்கள் 
நன்றி சொல்லி கைபற்றுகிறேன் 
ஒரு பெருமூச்சில் 
தவிப்பை உடைத்தெறிந்து 
ஆறுதல் அடைந்தது சற்றுமுன்வரை 
சலனத்தோடு பிடைத்துக்கொண்டிருந்த மனசு 


கவனப் பிழையால் 
தவறவிடுவது 
சாவியானாலும் கூட 
கனத்துதான் போகிறது மனசு (-:

Monday, April 29, 2013

முத்துச்சரம்

ஒரு முனையை 
இறுகப் படித்து மறுமுனையில் 
மெல்ல கோர்த்துக் கொண்டிருந்தேன்   முத்துக்களை 
கவனப் பிழை 
இடறிய கைகளில் இருந்து 
எங்கெங்கோ சிதறி ஓடி ஒளிந்துகொண்டது 
கீழ்விழுந்த அவ் முத்துக்கள் 
பதறி எழுந்து 
சிதறியதை பெருக்கி கோர்த்தேன் 
கண்ணில் பட்டு  கையில் கிட்டிய சொச்சம் 
வெறுமை வெற்றிடமாய் மிச்ச நூல் 

Wednesday, April 24, 2013

வலக்கரம் பிடித்தவள்ஊரின் 
நாலாப் புறத்திலிருந்து வீசும் வெட்கை 
மெல்ல தூரலிடும் 
உறவின் திரவத் துளிகள் வேற 
புழுக்கத்தின் எரிச்சல் நெருப்பில் 
புகைந்து கரிந்து 
துர்நாற்றத்தை உமிழ்ந்துகொண்டிருந்தது 
வண்ணங்கள் மொழுகிய 
முக அலங்கார பிளாஸ்டிக் மறை 
மழையில் நனைந்து
மிச்சமும் எரியாத சவமாய் கிடக்குகிறேன்
உயிர் உடுத்தியவர்கள்
எச்சி முலை குடித்தவர்கள்
ச்சீ... யென உமிழ்ந்து விலகுகையில்
முகம் சுழிக்காமல்
அள்ளியெடுத்து அரவனைக்கிறாள்
வலக்கரம் பிடித்தவள் 

Monday, April 22, 2013

அவள் ஆதியில் நிற்கிறாள்


அடையாள 
மகுடங்கள் கொண்டவர்கள் 
வாசல்களை முட்டுவதில் 
இன்றும் உடன்பாடில்லை எனக்கு

சில கதவுகளை
தவறுதலாய் முட்டியதுகூட
அவர்களுக்காக அல்ல
அவளுக்காகவே

அவர்கள்
தளிர்ந்து
பழுத்து
உதிரும் வெறுமொரு சருகே 

மரத்திற்கே இல்லை தலைக்கனம்

முகம் சுழித்து
எச்சம் உமிழ்வது
வேர் என்றாலும் சுடுநீரே அன்னம்

அவள் கரம் பற்றி
வாசல் முட்டும் அவர்களுக்கு
உள்புறத்தில் விரிகிறது சிவப்புக் கம்பளம்

அந்த
மிருகமில்லாத என் முற்றத்தில்
ஒரு வாசகத்தை மட்டும் எழுதி வைக்கிறேன்

அவள் ஆதியில் நிற்கிறாள்

-செய்தாலி

Saturday, April 6, 2013

நொறுக்கல்

கதிரொளி 
வெள்ளை நரகத்தின் துன்புறுத்தல் 
மயான இரவுகளில் நிழலாடுகிறது 
வெறுமையின் சுருக்கு கயிறொன்று 
தைரிய திமிரில் 
மரண பாதாளத்தில் குதிக்கிறார்கள் சிலர் 
எட்டி பார்த்து 
பயத்தின் கனச் சுமையோடு 
தலைதெரித்து ஓடிக் கொண்டிருக்கிறது 
பயந்தேறிக் கூட்டங்கள் 
உடல் மக்கிப்போன கல்லறைகளில்
கோழை யென்று சொல்லெறிந்து செல்கிறது
பயந்தேரிகளின் சந்ததிகள்-செய்தாலி

அக்கரை தஞ்சம்

செல்லரிக்காத 
சடலத்தின் துர்ஹெந்தம் 
கிளறி எறியப்பட்ட எலும்போடுகள் 
புழுக்கள் இழையும் 
காலம் பழகியும் உலராத புண் 
கீறல்களில் செங்கருதி ஒழுக 
பிடிமுறுக்கில் உசிருக்கு ஊசலாடியபடி 
புலிவால் பிடித்தவர்கள்


-செய்தாலி

Saturday, March 30, 2013

முப்பாட்டன்

கருவேலம்
முள் கோர்த்த கையிற்றால்
 கட்டப்பட்டு   சிறையில்  ரணப்பட்டு
கனப்பட்ட அகம்புரத்தின்  ரெட்டை நாழிகை

வெண் உதிரம் உதிர்த்து
சிறை மீண்ட பின்னும்
வீடுவரை காதடைக்கிறது
பஞ்சம் பிழைக்க புலம் பெயர்ந்து
கொத்தடிமை ஜென்மம் உடுத்திய
முப்பாட்டன்களின் ஒப்பாரிச் சத்தம்

மிகை
பகை
குற்றம்
குரவு
புறம்
காழ்ப்பு
ஊர் வாய்களின் சலசலப்பு


நவ
யுகத்தின் மெதப்பில்
கல்லெறியும் மேதாவிகள்
மறந்தார்களோ முப்பாட்டங்களை


 -செய்தாலி

Thursday, March 28, 2013

மிதிவண்டி
பணிரண்டு பதிமூணு 
வயசிருக்கும் 
அரை டவுசரும் 
அரை நாணயத்திற்கு இரவலெடுத்த 
அரை சைக்கிளில் 
அரைகுறை சைக்கிள் ஓட்டமுமாய் 
வீதியில் நானும் நண்பனும்

சற்று தூரம் கடக்க
பள்ளமாய் இறங்கி விரிந்தது வீதி
கை விறையலும் மனத் தடுமாற்றமும்
பார்த்து போகச்சொன்னான் பின்னாடியிருந்த நண்பன்


எதிரே
சீருடை அணிந்த வந்த பெண்மலரின் மேல்
கவனப் பிழையால்
முன்சக்கரம் முட்டிமோத
சற்றேனே வீதில் முளைத்து
வட்டமிட்டு சத்தம் எழுப்பியது மனித காக்காக்கள்


சின்னப் பிள்ளையாட்டம்
அழுதபடி எழுந்து நிற்கும்
பதினாறு சுமக்கும் பெண்மலருக்கு
ஆசுவாசப் சொல் வீசியது
எங்களை கூடி நின்று திட்டிக்கொண்டிருந்தது வாய்கள்


சின்னபிள்ளைகள்
மண்ணிச்சு விட்டுடுங்க
கூட்டத்தில் ஒரு பெரியவர்

சிதறி விழுந்த
பாடப் புத்தங்கள் அள்ளி
திரும்பி பார்த்துக்கொண்டே நடந்தவளிடம்
செய்கை பாஷையில்
மண்ணிக்க சொல்லி கெஞ்சிக் கொண்டிருந்தது
டவுசர் ப்ராயம்

-செய்தாலி

*டைரிக் குறிப்பிலிருந்து

Thursday, March 21, 2013

ரமேஷ் ஆசான்


ரமேஷ்
அவர்  பெயர் என்றாலும்
ஆசான் என்றுதான்
அவரை எல்லாரும் அழைப்பார்கள்

சமையல் கலையில்
சகலகலா வல்லவர் என்பதைவிட
நல்லவர் என்று சொல்வதே தகும்

வயிற்றை அல்ல
மனசையும் நிரப்பும்
 உணவுகள் கலைக் கலைஞன்

ஒரு
லிட்டர் மதுவை
ஒற்றைக்கு பருகினாலும்
விரைப்பா நிற்பார் எங்க ஊர்
ஐயனார்  சிலையாட்டம்


பிந்திய நாளொன்றில்
சுகவீனத்தில் விழுந்தவர்
பாடை ஏறியதாய்  கண்ணீரில் நனைந்தபடி ஒரு  நண்பர்


குடித்து
குடித்து
செயல் இழந்து  போச்சாம்
ரெண்டு சிறுநீரகமும்


இறுதிச்
சடங்கிற்கு  சென்றவர்களில்  நானும்
வீட்டு முற்றத்தில் சிதை எரிக்கும்
பழக்கமுடையவர்கள்  கேரளீயர்

சிதை
எரிந்து கொண்டிருக்க
காதை  அடைத்தது ஒரு சப்தம்
 என்னவென்றேன் அருகில்  நின்ற நண்பரிடம்
அது இதயம் வெடித்த சத்தம் என்றார் சிறுகுரலில்


அறுசுவைக் கலையை
ஊருக்கு சமைத்த கலைஞன்
 ருசிக்க தவறிவிட்டார் வாழ்க்கைச் சுவையை


இன்றும் யாரேனும்
மதுபாட்டலின்
முகப்பை திறக்கும்போதெல்லாம்
 காதில்  வந்து சலசலக்கிறது
அன்று சிதையில் வெடித்த இதயத்தின் சத்தம்-செய்தாலி 

*டைரிக் குறிப்பிலிருந்து 


Wednesday, March 20, 2013

கறை


கும்மியிட்ட
மழையின் சலசலப்பெல்லாம்
ஈசலின் ஆயுள்  கயற்றில் 
முடிச்சிட்டு சொப்பனமாய்
கல்லறைப் பாதையில்
இழையும் நத்தையின் எச்சத்தில்
துக்கக் கறை

Monday, March 18, 2013

சுவடுகளின் வடுக்கள் (மரம் )
நன்றாய் நினைவிருக்கிறது
அன்று 
புதியதாய் வாகன ஓட்டுதலின்  கைபிழை 
அசூரவேகத்தில் இடித்து  நசுக்கியதில்    
வெண்  குருதி ஒழுக 
குற்றுயிரும் கொலையுயிருமாக  
பிடைத்து கொண்டிருந்தது 
பிறந்து மூன்றே வாரமான  
அந்த சாலையோர செடிக்குழந்தை 

தண்டனை பயம் 
முகம் திருப்பிய என் ஓட்டம் 
ஆம் 
கொலையுண்டது 
மரமானாலும் மனிதனானாலும் 
இங்கு 
தண்டனையில் பாரபட்சம் இல்லை 


பிந்திய நாளொன்றில் 
பஸ்சுக்கான  என் காத்திருப்பில் 
உச்சியில் மண்நோக்கி 
நெருப்பை  உமிழ்ந்தபடி கதிரவன் 
வியர்வைத் துளிகளில் 
தொப்பலாய் நனைந்து நிற்கும் என்னை
எதிர் திசையிலிருந்து 
கிளைக் கரம் அசைத்து   அழைத்தது 
மடியில்  நிழல் விரித்து   நிற்கும் அம்மரம் 

நிழல் நீர் புகட்டி 
என் வெட்கை  தணித்த இம்மரம் 
அன்று 
என்னால்  நசுக்கப்ட்ட செடி நம் 
பாதங்களில் 
மிதிபடும்  விதைகள், செடிகள் 
மறக்கவேண்டாம் அது நாளைய 
நம் நிழல்கள் 

-செய்தாலி 


*டைரிக் குறிப்பிலிருந்து 

Tuesday, March 12, 2013

சுவடுகளின் வடுக்கள் (நடிப்பு )ஒரு 
பேரூந்துப் பயணத்தில் 
பணப்பையை தொலைத்து விட்டாய் 
இல்லை 
ஊரிலிருந்து 
தாய் இறந்த செய்தி வருகிறது 
எப்படி அழுவாய் 
அழுது காட்டு என்றார் 
நேர்முகத் தேர்வில் 
அந்த நாடக இயக்குனர் 
முகத்தை 
சுளித்து 
நெளித்து
விரித்து  
பல  பாவத்தில் முயன்றேன் 
விழியில் 
கண்ணீர் மட்டுமே எட்டிப் பார்த்தது 
பிறகு பார்க்கலாம் என்றார் 
வீடுதிருப்பிய மாலையில் 
முதல் முறையாக அழுதுபார்த்தேன்   
நிலைக் கண்ணாடிமுன் 

*டைரிக் குறிப்பிலிருந்து 
-செய்தாலி  

Monday, March 11, 2013

உயிர் நிழல் (அ.நா.கா, 13)
முன்


தனிமைகளில்

சற்று தூரத்தில்

விலகியே விளையாடிபடி

உறவுகளின் நினைவுகள்

எட்டிப் படிக்கும் என் முயற்ச்சியில்

மின்மினி பூச்சிகளாய்

சிதறி பறக்கிறது...

நீ

வந்தபின்னும்

தனிமைகள் வந்ததுண்டு

தோளில் சாய்ந்து

தலைகோதி

இறுக்கமாய் விரல்களை பற்றிப் பிடித்து

செவிகடித்து

மெல்லிய குரல்களில் கதைபேசி

இப்படி என்னைச் சுற்றியே விளையாடுகிறது

உன் நினைவுகள்நம்

உலகத்தை உடைத்து

எழுந்து

சல சலப்பு உலகில் நுழைகிறேன்

என்னை முந்திக்கொண்டு

எனக்கான பாதை விரிக்கிறது

உன் நிழல்Monday, January 28, 2013

சாணி நாத்தம்

முச்சந்தி வீதியில் 
கொட்டிக் கிடக்கும் சாணியில் 
நறு மண(த)ம்
துர்நோய் 
எதோ மாடு இட்ட நரகலை 
ஒருவோர்கொருவர் வீசியெறிந்து 
பூசி விளையாடிகிறது ஒரு கூட்டம் 
ஊரெல்லாம் 
சாணி நாத்தம்

-செய்தாலி 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...