Saturday, March 30, 2013

முப்பாட்டன்

கருவேலம்
முள் கோர்த்த கையிற்றால்
 கட்டப்பட்டு   சிறையில்  ரணப்பட்டு
கனப்பட்ட அகம்புரத்தின்  ரெட்டை நாழிகை

வெண் உதிரம் உதிர்த்து
சிறை மீண்ட பின்னும்
வீடுவரை காதடைக்கிறது
பஞ்சம் பிழைக்க புலம் பெயர்ந்து
கொத்தடிமை ஜென்மம் உடுத்திய
முப்பாட்டன்களின் ஒப்பாரிச் சத்தம்

மிகை
பகை
குற்றம்
குரவு
புறம்
காழ்ப்பு
ஊர் வாய்களின் சலசலப்பு


நவ
யுகத்தின் மெதப்பில்
கல்லெறியும் மேதாவிகள்
மறந்தார்களோ முப்பாட்டங்களை


 -செய்தாலி

Thursday, March 28, 2013

மிதிவண்டி
பணிரண்டு பதிமூணு 
வயசிருக்கும் 
அரை டவுசரும் 
அரை நாணயத்திற்கு இரவலெடுத்த 
அரை சைக்கிளில் 
அரைகுறை சைக்கிள் ஓட்டமுமாய் 
வீதியில் நானும் நண்பனும்

சற்று தூரம் கடக்க
பள்ளமாய் இறங்கி விரிந்தது வீதி
கை விறையலும் மனத் தடுமாற்றமும்
பார்த்து போகச்சொன்னான் பின்னாடியிருந்த நண்பன்


எதிரே
சீருடை அணிந்த வந்த பெண்மலரின் மேல்
கவனப் பிழையால்
முன்சக்கரம் முட்டிமோத
சற்றேனே வீதில் முளைத்து
வட்டமிட்டு சத்தம் எழுப்பியது மனித காக்காக்கள்


சின்னப் பிள்ளையாட்டம்
அழுதபடி எழுந்து நிற்கும்
பதினாறு சுமக்கும் பெண்மலருக்கு
ஆசுவாசப் சொல் வீசியது
எங்களை கூடி நின்று திட்டிக்கொண்டிருந்தது வாய்கள்


சின்னபிள்ளைகள்
மண்ணிச்சு விட்டுடுங்க
கூட்டத்தில் ஒரு பெரியவர்

சிதறி விழுந்த
பாடப் புத்தங்கள் அள்ளி
திரும்பி பார்த்துக்கொண்டே நடந்தவளிடம்
செய்கை பாஷையில்
மண்ணிக்க சொல்லி கெஞ்சிக் கொண்டிருந்தது
டவுசர் ப்ராயம்

-செய்தாலி

*டைரிக் குறிப்பிலிருந்து

Thursday, March 21, 2013

ரமேஷ் ஆசான்


ரமேஷ்
அவர்  பெயர் என்றாலும்
ஆசான் என்றுதான்
அவரை எல்லாரும் அழைப்பார்கள்

சமையல் கலையில்
சகலகலா வல்லவர் என்பதைவிட
நல்லவர் என்று சொல்வதே தகும்

வயிற்றை அல்ல
மனசையும் நிரப்பும்
 உணவுகள் கலைக் கலைஞன்

ஒரு
லிட்டர் மதுவை
ஒற்றைக்கு பருகினாலும்
விரைப்பா நிற்பார் எங்க ஊர்
ஐயனார்  சிலையாட்டம்


பிந்திய நாளொன்றில்
சுகவீனத்தில் விழுந்தவர்
பாடை ஏறியதாய்  கண்ணீரில் நனைந்தபடி ஒரு  நண்பர்


குடித்து
குடித்து
செயல் இழந்து  போச்சாம்
ரெண்டு சிறுநீரகமும்


இறுதிச்
சடங்கிற்கு  சென்றவர்களில்  நானும்
வீட்டு முற்றத்தில் சிதை எரிக்கும்
பழக்கமுடையவர்கள்  கேரளீயர்

சிதை
எரிந்து கொண்டிருக்க
காதை  அடைத்தது ஒரு சப்தம்
 என்னவென்றேன் அருகில்  நின்ற நண்பரிடம்
அது இதயம் வெடித்த சத்தம் என்றார் சிறுகுரலில்


அறுசுவைக் கலையை
ஊருக்கு சமைத்த கலைஞன்
 ருசிக்க தவறிவிட்டார் வாழ்க்கைச் சுவையை


இன்றும் யாரேனும்
மதுபாட்டலின்
முகப்பை திறக்கும்போதெல்லாம்
 காதில்  வந்து சலசலக்கிறது
அன்று சிதையில் வெடித்த இதயத்தின் சத்தம்-செய்தாலி 

*டைரிக் குறிப்பிலிருந்து 


Wednesday, March 20, 2013

கறை


கும்மியிட்ட
மழையின் சலசலப்பெல்லாம்
ஈசலின் ஆயுள்  கயற்றில் 
முடிச்சிட்டு சொப்பனமாய்
கல்லறைப் பாதையில்
இழையும் நத்தையின் எச்சத்தில்
துக்கக் கறை

Monday, March 18, 2013

சுவடுகளின் வடுக்கள் (மரம் )
நன்றாய் நினைவிருக்கிறது
அன்று 
புதியதாய் வாகன ஓட்டுதலின்  கைபிழை 
அசூரவேகத்தில் இடித்து  நசுக்கியதில்    
வெண்  குருதி ஒழுக 
குற்றுயிரும் கொலையுயிருமாக  
பிடைத்து கொண்டிருந்தது 
பிறந்து மூன்றே வாரமான  
அந்த சாலையோர செடிக்குழந்தை 

தண்டனை பயம் 
முகம் திருப்பிய என் ஓட்டம் 
ஆம் 
கொலையுண்டது 
மரமானாலும் மனிதனானாலும் 
இங்கு 
தண்டனையில் பாரபட்சம் இல்லை 


பிந்திய நாளொன்றில் 
பஸ்சுக்கான  என் காத்திருப்பில் 
உச்சியில் மண்நோக்கி 
நெருப்பை  உமிழ்ந்தபடி கதிரவன் 
வியர்வைத் துளிகளில் 
தொப்பலாய் நனைந்து நிற்கும் என்னை
எதிர் திசையிலிருந்து 
கிளைக் கரம் அசைத்து   அழைத்தது 
மடியில்  நிழல் விரித்து   நிற்கும் அம்மரம் 

நிழல் நீர் புகட்டி 
என் வெட்கை  தணித்த இம்மரம் 
அன்று 
என்னால்  நசுக்கப்ட்ட செடி நம் 
பாதங்களில் 
மிதிபடும்  விதைகள், செடிகள் 
மறக்கவேண்டாம் அது நாளைய 
நம் நிழல்கள் 

-செய்தாலி 


*டைரிக் குறிப்பிலிருந்து 

Tuesday, March 12, 2013

சுவடுகளின் வடுக்கள் (நடிப்பு )ஒரு 
பேரூந்துப் பயணத்தில் 
பணப்பையை தொலைத்து விட்டாய் 
இல்லை 
ஊரிலிருந்து 
தாய் இறந்த செய்தி வருகிறது 
எப்படி அழுவாய் 
அழுது காட்டு என்றார் 
நேர்முகத் தேர்வில் 
அந்த நாடக இயக்குனர் 
முகத்தை 
சுளித்து 
நெளித்து
விரித்து  
பல  பாவத்தில் முயன்றேன் 
விழியில் 
கண்ணீர் மட்டுமே எட்டிப் பார்த்தது 
பிறகு பார்க்கலாம் என்றார் 
வீடுதிருப்பிய மாலையில் 
முதல் முறையாக அழுதுபார்த்தேன்   
நிலைக் கண்ணாடிமுன் 

*டைரிக் குறிப்பிலிருந்து 
-செய்தாலி  

Monday, March 11, 2013

உயிர் நிழல் (அ.நா.கா, 13)
முன்


தனிமைகளில்

சற்று தூரத்தில்

விலகியே விளையாடிபடி

உறவுகளின் நினைவுகள்

எட்டிப் படிக்கும் என் முயற்ச்சியில்

மின்மினி பூச்சிகளாய்

சிதறி பறக்கிறது...

நீ

வந்தபின்னும்

தனிமைகள் வந்ததுண்டு

தோளில் சாய்ந்து

தலைகோதி

இறுக்கமாய் விரல்களை பற்றிப் பிடித்து

செவிகடித்து

மெல்லிய குரல்களில் கதைபேசி

இப்படி என்னைச் சுற்றியே விளையாடுகிறது

உன் நினைவுகள்நம்

உலகத்தை உடைத்து

எழுந்து

சல சலப்பு உலகில் நுழைகிறேன்

என்னை முந்திக்கொண்டு

எனக்கான பாதை விரிக்கிறது

உன் நிழல்LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...