Tuesday, March 12, 2013

சுவடுகளின் வடுக்கள் (நடிப்பு )



ஒரு 
பேரூந்துப் பயணத்தில் 
பணப்பையை தொலைத்து விட்டாய் 
இல்லை 
ஊரிலிருந்து 
தாய் இறந்த செய்தி வருகிறது 
எப்படி அழுவாய் 
அழுது காட்டு என்றார் 
நேர்முகத் தேர்வில் 
அந்த நாடக இயக்குனர் 
முகத்தை 
சுளித்து 
நெளித்து
விரித்து  
பல  பாவத்தில் முயன்றேன் 
விழியில் 
கண்ணீர் மட்டுமே எட்டிப் பார்த்தது 
பிறகு பார்க்கலாம் என்றார் 
வீடுதிருப்பிய மாலையில் 
முதல் முறையாக அழுதுபார்த்தேன்   
நிலைக் கண்ணாடிமுன் 

*டைரிக் குறிப்பிலிருந்து 
-செய்தாலி  

9 comments:

  1. வீடுதிருப்பிய மாலையில்
    முதல் முறையாக அழுதுபார்த்தேன்
    நிலைக் கண்ணாடிமுன்
    ///

    உண்மையான அழுகை அது தான்

    ReplyDelete
  2. அருமையான சொல்லாக்கம் தோழரே..
    இன்றிருக்கும் நிலையதுவே
    நிதர்சனமான நடிப்பாம்...

    ReplyDelete
  3. அருமையான கவிதை...
    சூப்பர்ப்....

    ReplyDelete
  4. உங்களின் தளம் பற்றிய சிறு விளக்கம் ...
    காண :http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_14.html

    ReplyDelete
  5. ''....வீடுதிருப்பிய மாலையில்
    முதல் முறையாக அழுதுபார்த்தேன்
    நிலைக் கண்ணாடிமுன் ..''
    நல்ல நடிப்பு... சகோ முகநூலில் இதைக் கண்டேன.
    ; இந்த இணயப்பையும் அங்கு போட்டால் நான் இங்கும் கருத்திடுவேன்.
    இனிய வாழ்த்து
    என்வலையில் தங்களைக் காண விருப்பம்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  6. அருமை...

    வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. நடிப்பில்லா அழுகை அருமை...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...