Monday, March 18, 2013

சுவடுகளின் வடுக்கள் (மரம் )




நன்றாய் நினைவிருக்கிறது
அன்று 
புதியதாய் வாகன ஓட்டுதலின்  கைபிழை 
அசூரவேகத்தில் இடித்து  நசுக்கியதில்    
வெண்  குருதி ஒழுக 
குற்றுயிரும் கொலையுயிருமாக  
பிடைத்து கொண்டிருந்தது 
பிறந்து மூன்றே வாரமான  
அந்த சாலையோர செடிக்குழந்தை 

தண்டனை பயம் 
முகம் திருப்பிய என் ஓட்டம் 
ஆம் 
கொலையுண்டது 
மரமானாலும் மனிதனானாலும் 
இங்கு 
தண்டனையில் பாரபட்சம் இல்லை 


பிந்திய நாளொன்றில் 
பஸ்சுக்கான  என் காத்திருப்பில் 
உச்சியில் மண்நோக்கி 
நெருப்பை  உமிழ்ந்தபடி கதிரவன் 
வியர்வைத் துளிகளில் 
தொப்பலாய் நனைந்து நிற்கும் என்னை
எதிர் திசையிலிருந்து 
கிளைக் கரம் அசைத்து   அழைத்தது 
மடியில்  நிழல் விரித்து   நிற்கும் அம்மரம் 

நிழல் நீர் புகட்டி 
என் வெட்கை  தணித்த இம்மரம் 
அன்று 
என்னால்  நசுக்கப்ட்ட செடி 



நம் 
பாதங்களில் 
மிதிபடும்  விதைகள், செடிகள் 
மறக்கவேண்டாம் அது நாளைய 
நம் நிழல்கள் 

-செய்தாலி 


*டைரிக் குறிப்பிலிருந்து 

8 comments:

  1. ஒவ்வொரும் இது போல் கருதினால் மழைக்கேது பஞ்சம்...?

    ReplyDelete
  2. பாதங்களில்
    மிதிபடும் விதைகள், செடிகள்
    மறக்கவேண்டாம் அது நாளைய
    நம் நிழல்கள்

    Arumai..

    ReplyDelete
  3. அருமையான கவிதைப் பகிர்வு..... கற்பனை செய்து பார்க்கின் பயமாய்தான் உள்ளது..எல்லோரும் அவர்களாலான முயற்சியை செய்தாலொழிய எதிர்காலம் ????

    ReplyDelete
  4. ''..பாதங்களில்
    மிதிபடும் விதைகள், செடிகள்
    மறக்கவேண்டாம் அது நாளைய
    நம் நிழல்கள் ...
    Unmai....இந்த உண்மையை மறக்கிறோம் அதுவே வேதனை.
    இனிய வாழ்த்து.
    வரலாமே வலைக்கு.
    நல்வரவு!.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  5. நம்
    பாதங்களில்
    மிதிபடும் விதைகள், செடிகள்
    மறக்கவேண்டாம் அது நாளைய
    நம் நிழல்கள்
    கருணையின் விம்பம்
    கவிதையானது இங்கே
    அருமையான உணர்வு சகோதரா
    வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  6. வணக்கம் நண்பா ...
    படித்து முடிக்கையில் சிறு தூசியின் மீதும் சிறு அன்பு வருகிறது ..
    அந்த வீரியம் இந்த கவிதையில் உள்ளது

    ReplyDelete
  7. மனசாட்சி அருமை

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...