Thursday, March 21, 2013

ரமேஷ் ஆசான்


ரமேஷ்
அவர்  பெயர் என்றாலும்
ஆசான் என்றுதான்
அவரை எல்லாரும் அழைப்பார்கள்

சமையல் கலையில்
சகலகலா வல்லவர் என்பதைவிட
நல்லவர் என்று சொல்வதே தகும்

வயிற்றை அல்ல
மனசையும் நிரப்பும்
 உணவுகள் கலைக் கலைஞன்

ஒரு
லிட்டர் மதுவை
ஒற்றைக்கு பருகினாலும்
விரைப்பா நிற்பார் எங்க ஊர்
ஐயனார்  சிலையாட்டம்


பிந்திய நாளொன்றில்
சுகவீனத்தில் விழுந்தவர்
பாடை ஏறியதாய்  கண்ணீரில் நனைந்தபடி ஒரு  நண்பர்


குடித்து
குடித்து
செயல் இழந்து  போச்சாம்
ரெண்டு சிறுநீரகமும்


இறுதிச்
சடங்கிற்கு  சென்றவர்களில்  நானும்
வீட்டு முற்றத்தில் சிதை எரிக்கும்
பழக்கமுடையவர்கள்  கேரளீயர்

சிதை
எரிந்து கொண்டிருக்க
காதை  அடைத்தது ஒரு சப்தம்
 என்னவென்றேன் அருகில்  நின்ற நண்பரிடம்
அது இதயம் வெடித்த சத்தம் என்றார் சிறுகுரலில்


அறுசுவைக் கலையை
ஊருக்கு சமைத்த கலைஞன்
 ருசிக்க தவறிவிட்டார் வாழ்க்கைச் சுவையை


இன்றும் யாரேனும்
மதுபாட்டலின்
முகப்பை திறக்கும்போதெல்லாம்
 காதில்  வந்து சலசலக்கிறது
அன்று சிதையில் வெடித்த இதயத்தின் சத்தம்



-செய்தாலி 

*டைரிக் குறிப்பிலிருந்து 


5 comments:

  1. இன்றைக்கு பலரும் இது போல் வாழ்க்கைச் சுவையை அறியாதவர்களாகவே சென்று விடுகிறார்கள்-மற்றவர்களுக்கு கசப்பை மட்டும் கொடுத்து விட்டு...

    ReplyDelete
  2. உண்மைதான் வாழ்கை வாழும் சுவை தெரிந்துவிட்டால் வேறு சுவை மயக்காது

    ReplyDelete
  3. கண்களை கலங்கச் செய்யும் கவிதை வரிகள்...
    இங்கு வார விடுமுறை என்றால் பாட்டில்களை திறப்பதற்கென்றே கூடுகிறார்கள்... என்ன சொல்வது....

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரரே....
    வலைச்சரத்தில் கண்டு கவிக்கோயிலைக் காணவந்தேன்
    நிலையாகி நின்றுவிட்டேன் கலையே கோயிலெனக்கண்டு!

    அருமை. சிறப்பான சிந்தனை வரிகள்!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. ''..முகப்பை திறக்கும்போதெல்லாம்
    காதில் வந்து சலசலக்கிறது
    அன்று சிதையில் வெடித்த இதயத்தின் சத்தம்..''
    வித்தியாச அனுபவம் தான். முதன் முதலாகக் கேள்விப்படுகிறேன்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...