Thursday, March 28, 2013

மிதிவண்டி




பணிரண்டு பதிமூணு 
வயசிருக்கும் 
அரை டவுசரும் 
அரை நாணயத்திற்கு இரவலெடுத்த 
அரை சைக்கிளில் 
அரைகுறை சைக்கிள் ஓட்டமுமாய் 
வீதியில் நானும் நண்பனும்

சற்று தூரம் கடக்க
பள்ளமாய் இறங்கி விரிந்தது வீதி
கை விறையலும் மனத் தடுமாற்றமும்
பார்த்து போகச்சொன்னான் பின்னாடியிருந்த நண்பன்


எதிரே
சீருடை அணிந்த வந்த பெண்மலரின் மேல்
கவனப் பிழையால்
முன்சக்கரம் முட்டிமோத
சற்றேனே வீதில் முளைத்து
வட்டமிட்டு சத்தம் எழுப்பியது மனித காக்காக்கள்


சின்னப் பிள்ளையாட்டம்
அழுதபடி எழுந்து நிற்கும்
பதினாறு சுமக்கும் பெண்மலருக்கு
ஆசுவாசப் சொல் வீசியது
எங்களை கூடி நின்று திட்டிக்கொண்டிருந்தது வாய்கள்


சின்னபிள்ளைகள்
மண்ணிச்சு விட்டுடுங்க
கூட்டத்தில் ஒரு பெரியவர்

சிதறி விழுந்த
பாடப் புத்தங்கள் அள்ளி
திரும்பி பார்த்துக்கொண்டே நடந்தவளிடம்
செய்கை பாஷையில்
மண்ணிக்க சொல்லி கெஞ்சிக் கொண்டிருந்தது
டவுசர் ப்ராயம்

-செய்தாலி

*டைரிக் குறிப்பிலிருந்து

4 comments:

  1. இனிய நினைவுகள்...

    இன்றைக்கு விழுந்தால்... திரும்பிப் பார்க்க நேரமிருப்பதில்லை சிலருக்கு...

    ReplyDelete
  2. எப்போதும் பாடசாலைப் பழைய நினைவு இனிமையே!
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  3. மண்ணிக்க சொல்லி கெஞ்சிக் கொண்டிருந்தது
    டவுசர் ப்ராயம்--- வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. மன்னிக்கப்பட்டாலும் மறக்கப்படுவதில்லை சில தவறுகள்! இளம்பிள்ளைப் பிராய நினைவுகள் என்றுமே பசுமரத்தாணிதான் !

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...