Saturday, March 30, 2013

முப்பாட்டன்





கருவேலம்
முள் கோர்த்த கையிற்றால்
 கட்டப்பட்டு   சிறையில்  ரணப்பட்டு
கனப்பட்ட அகம்புரத்தின்  ரெட்டை நாழிகை

வெண் உதிரம் உதிர்த்து
சிறை மீண்ட பின்னும்
வீடுவரை காதடைக்கிறது
பஞ்சம் பிழைக்க புலம் பெயர்ந்து
கொத்தடிமை ஜென்மம் உடுத்திய
முப்பாட்டன்களின் ஒப்பாரிச் சத்தம்

மிகை
பகை
குற்றம்
குரவு
புறம்
காழ்ப்பு
ஊர் வாய்களின் சலசலப்பு


நவ
யுகத்தின் மெதப்பில்
கல்லெறியும் மேதாவிகள்
மறந்தார்களோ முப்பாட்டங்களை


 -செய்தாலி

5 comments:

  1. எப்போதோ மறந்து விட்டார்கள்...

    ReplyDelete
  2. பெற்ற அப்பனையே மறந்துடறாங்க... முப்பாட்டனை நினைப்புல வைத்திருப்பாங்களா சகோ..

    ReplyDelete
  3. நேற்றைய நிலையைக் கூட பலர் இன்று மறந்துவிடுகிறார்களே.. என்ன செய்வது?

    ஆதங்கம் எழுப்பும் அற்புதமான கவிதைக்குப் பாராட்டுகள் செய்தாலி.

    ReplyDelete
  4. உண்மை தான்

    ReplyDelete
  5. எப்பொழுது உயிர் கிடைக்கும் நம் மூப்பாட்டன்களின் தியாகங்களுக்கும் , நினைவுகளுக்கும்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...