Tuesday, April 30, 2013

சாவி

நடுநிசிவரை 
அறையை தலைகீழ் கமிழ்த்தி  உதறி 
விளக்கணைத்த பிந்திய 
இரவில் எப்போதோ  
உறங்கிப் போயிருந்தேன் சலனச் சுமையோடு 
தலைமாட்டில்  இருந்து 
நகைத்தபடி யாரோ சிலர்
விருட்டேழுந்தேன் நேரம் தவறி இருந்தது 
மீண்டும் ஒரு முயற்ச்சியாய் 
குடியிருப்பச் சுற்றி   வட்டமிட்டது  விழியும் மனமும் 
ஒரு வேளை 
அங்கே விட்டிருக்கலாம் 
இல்லை.. இல்லை 
கைவிரலில் வீதிநெடுக நாட்டியமாடுவதால் 
தவறி விழுந்திருக்கலாம் 
குளித்து உடுத்தி 
அவசரமாய் கீழிறங்கி 
வீதியோரத்தில் விழிகளை மேயவிட்டு 
அலுவலகம் வரை மெல்ல நடந்தது மனசு 
இங்காவது இருக்க வேண்டும் 
பிரத்தைனையோடு அலுவலகம் நுழைந்தேன் 
நேற்று சாவியை மறந்திடீங்களா 
புன்சிரிப்போடு எதிர்நிற்கும் 
காவலாளியின் விரல்களில் 
தலைதாழ்த்தி நானித்தபடி சாவிக் கொத்துக்கள் 
நன்றி சொல்லி கைபற்றுகிறேன் 
ஒரு பெருமூச்சில் 
தவிப்பை உடைத்தெறிந்து 
ஆறுதல் அடைந்தது சற்றுமுன்வரை 
சலனத்தோடு பிடைத்துக்கொண்டிருந்த மனசு 


கவனப் பிழையால் 
தவறவிடுவது 
சாவியானாலும் கூட 
கனத்துதான் போகிறது மனசு (-:

Monday, April 29, 2013

முத்துச்சரம்

ஒரு முனையை 
இறுகப் படித்து மறுமுனையில் 
மெல்ல கோர்த்துக் கொண்டிருந்தேன்   முத்துக்களை 
கவனப் பிழை 
இடறிய கைகளில் இருந்து 
எங்கெங்கோ சிதறி ஓடி ஒளிந்துகொண்டது 
கீழ்விழுந்த அவ் முத்துக்கள் 
பதறி எழுந்து 
சிதறியதை பெருக்கி கோர்த்தேன் 
கண்ணில் பட்டு  கையில் கிட்டிய சொச்சம் 
வெறுமை வெற்றிடமாய் மிச்ச நூல் 

Wednesday, April 24, 2013

வலக்கரம் பிடித்தவள்ஊரின் 
நாலாப் புறத்திலிருந்து வீசும் வெட்கை 
மெல்ல தூரலிடும் 
உறவின் திரவத் துளிகள் வேற 
புழுக்கத்தின் எரிச்சல் நெருப்பில் 
புகைந்து கரிந்து 
துர்நாற்றத்தை உமிழ்ந்துகொண்டிருந்தது 
வண்ணங்கள் மொழுகிய 
முக அலங்கார பிளாஸ்டிக் மறை 
மழையில் நனைந்து
மிச்சமும் எரியாத சவமாய் கிடக்குகிறேன்
உயிர் உடுத்தியவர்கள்
எச்சி முலை குடித்தவர்கள்
ச்சீ... யென உமிழ்ந்து விலகுகையில்
முகம் சுழிக்காமல்
அள்ளியெடுத்து அரவனைக்கிறாள்
வலக்கரம் பிடித்தவள் 

Monday, April 22, 2013

அவள் ஆதியில் நிற்கிறாள்


அடையாள 
மகுடங்கள் கொண்டவர்கள் 
வாசல்களை முட்டுவதில் 
இன்றும் உடன்பாடில்லை எனக்கு

சில கதவுகளை
தவறுதலாய் முட்டியதுகூட
அவர்களுக்காக அல்ல
அவளுக்காகவே

அவர்கள்
தளிர்ந்து
பழுத்து
உதிரும் வெறுமொரு சருகே 

மரத்திற்கே இல்லை தலைக்கனம்

முகம் சுழித்து
எச்சம் உமிழ்வது
வேர் என்றாலும் சுடுநீரே அன்னம்

அவள் கரம் பற்றி
வாசல் முட்டும் அவர்களுக்கு
உள்புறத்தில் விரிகிறது சிவப்புக் கம்பளம்

அந்த
மிருகமில்லாத என் முற்றத்தில்
ஒரு வாசகத்தை மட்டும் எழுதி வைக்கிறேன்

அவள் ஆதியில் நிற்கிறாள்

-செய்தாலி

Saturday, April 6, 2013

நொறுக்கல்

கதிரொளி 
வெள்ளை நரகத்தின் துன்புறுத்தல் 
மயான இரவுகளில் நிழலாடுகிறது 
வெறுமையின் சுருக்கு கயிறொன்று 
தைரிய திமிரில் 
மரண பாதாளத்தில் குதிக்கிறார்கள் சிலர் 
எட்டி பார்த்து 
பயத்தின் கனச் சுமையோடு 
தலைதெரித்து ஓடிக் கொண்டிருக்கிறது 
பயந்தேறிக் கூட்டங்கள் 
உடல் மக்கிப்போன கல்லறைகளில்
கோழை யென்று சொல்லெறிந்து செல்கிறது
பயந்தேரிகளின் சந்ததிகள்-செய்தாலி

அக்கரை தஞ்சம்

செல்லரிக்காத 
சடலத்தின் துர்ஹெந்தம் 
கிளறி எறியப்பட்ட எலும்போடுகள் 
புழுக்கள் இழையும் 
காலம் பழகியும் உலராத புண் 
கீறல்களில் செங்கருதி ஒழுக 
பிடிமுறுக்கில் உசிருக்கு ஊசலாடியபடி 
புலிவால் பிடித்தவர்கள்


-செய்தாலி

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...