Monday, April 22, 2013

அவள் ஆதியில் நிற்கிறாள்






அடையாள 
மகுடங்கள் கொண்டவர்கள் 
வாசல்களை முட்டுவதில் 
இன்றும் உடன்பாடில்லை எனக்கு

சில கதவுகளை
தவறுதலாய் முட்டியதுகூட
அவர்களுக்காக அல்ல
அவளுக்காகவே

அவர்கள்
தளிர்ந்து
பழுத்து
உதிரும் வெறுமொரு சருகே 

மரத்திற்கே இல்லை தலைக்கனம்

முகம் சுழித்து
எச்சம் உமிழ்வது
வேர் என்றாலும் சுடுநீரே அன்னம்

அவள் கரம் பற்றி
வாசல் முட்டும் அவர்களுக்கு
உள்புறத்தில் விரிகிறது சிவப்புக் கம்பளம்

அந்த
மிருகமில்லாத என் முற்றத்தில்
ஒரு வாசகத்தை மட்டும் எழுதி வைக்கிறேன்

அவள் ஆதியில் நிற்கிறாள்

-செய்தாலி

4 comments:

  1. அருமை....

    வாசலுக்குள் மகுடங்களை கழட்டலாம் ஆனால்
    வெளியே யாரும் மகுடம் துறந்து வாழ பழகவில்லை...

    ReplyDelete
  2. வணக்கம் உறவே

    உங்களின் பயனுள்ள பதிவுகளை இன்னும் பலரிடம் சென்றடைய எமது மீனகம் திரட்டியிலும் இணைக்கவும். தங்கள் வலைத்தளத்தின் RSS செய்தியோடை மூலம் இடுகைகள் எமது மீனகம் திரட்டியில் எளிதாக இணைக்கடும். உங்கள் தளத்தினையும் பதியவும்... http://www.thiratti.meenakam.com/

    ReplyDelete
  3. யதார்த்தம்... வித்தியாசமான சிந்தனை. அருமை.
    வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  4. பாதி புரிந்தும் புரியாமலும்...
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...