Sunday, May 12, 2013

பசியறிந்தவள்





அன்று 
வீட்டில் ஒரு விசேஷம் 
தடபுடலான சமையல்கள் 
மதிய பசியில் உறவுகளும் 
மேசையிலோ ஆவி பரத்திக்கொண்டு 
பரிமாறிய உணவுகள் 

எல்லாரும் வரட்டும் அப்பா 
எனக்கு பசிக்குது தம்பி 
அண்ணன் வரட்டும் நான் 
இப்பம் வந்திடுவான் அக்கா
இந்த பயல் எங்க போனான் பாட்டி
நீங்க சாபிடுங்க அவர் வருவார் மதினி

பசி தாங்கமாட்டான்
சாப்பாடு நேரத்தில்
வெளியில் அப்படி என்ன வேலையோ
சற்றே கோபமாய் முனுமுனுத்தபடி
திண்ணையில் இருந்து 
எழுந்து  
வெளிவாசலில் வந்து நின்று
வீதியை வெரித்து பார்த்துக் கொண்டிருந்தாள் ''அம்மா''

4 comments:

  1. அன்னையின் அன்பிற்கு அளவேயில்லை....

    ReplyDelete
  2. திண்ணையில் இருந்து எழுந்து
    வெளிவாசலில் வந்து நின்று
    வீதியை வெரித்து பார்த்துக் கொண்டிருந்தாள் ''அம்மா''
    Ethuthaan amma......
    Happy mothers day..
    Open door to my web.
    Well come...
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  3. கவிதை சிறப்பு...

    அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. அம்மாக்கள் திண்னையில் நிற்பது புதிதல்ல.அன்னையர் தின நல் வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...