Wednesday, May 8, 2013

நீச்சல்





அருணாக் கயிற்றின் 
பிடிமுறுக்கில் 
சிறசலடித்த கிணற்றடி நீச்சல் 
காலம் தடிக்கி 
தவறி விழுந்த குளத்தில் 
கரைகள் தேடிய எதிர்நீச்சல்கள் 
அடித்து இழுத்து அசூர  வாய்பிளந்து
உள்வாங்கிய நதியோ  
சமுத்திரத்தின் மறுகரையில்  உமிழ்தபடி 
கரையில் கால் நனைத்துக்கொண்டே 
அக்கரையை  வெறித்துப் பார்க்கிறது 
உதிர்ந்து கொண்டிருக்கும் மிச்சப் பருவம் 

7 comments:

  1. அருமையான ஆழமான சிந்தனை
    நானும் கவிதைக்குள் நீந்திக் களித்தேன்
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. எதார்த்தமான கவிதை...

    ReplyDelete
  3. வாழ்க்கையின் சுருக்கம்... அழகிய கவிதையில்...

    ReplyDelete
  4. //உள்வாங்கிய நதியோ // வரிகள் நதியின் வலியை சொல்லுகிறது

    ReplyDelete
  5. அவ்வளவு தான் வாழ்க்கை...

    அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. யோசிக்கவைத்த கவிதை

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...