Sunday, June 23, 2013

நிழல்பிம்பம்



விடுமுறையன்று 
மறுபூமி வீதியில் 
நடந்து கொண்டிருந்தேன் 
பின்னிலிருந்து 
இடுப்பை வளைத்து பிடித்தபடி 
மறை தழும்பை சொல்லி 
நீ அவன்தானே என்றான் 
ஊர் தெருக்களில் எப்போதோ 
கூடி விளையாடிய பால்ய நண்பன் 
என் நிழல்மரத்தில் 
எத்தனையோ இலைவுதிர்கள்
சற்று திகைத்துத்தான் போனேன்
அவனில் என் பால்யத்தின் முகம் பார்த்தபோது 



3 comments:

  1. இனிய சந்திப்பை ரசித்தேன்...

    ReplyDelete
  2. நினைவுகளின் சுவடுகளில்
    நிழலதன் பிம்பம் கண்ட கவி அருமை.
    நல்ல நினைவுப்பகிர்வு!

    வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...