Wednesday, June 26, 2013

மழை





ஒரே ஈரமாய் இருக்கு 
இன்று அதிக வேலையோ யென்றேன் 
இரவில் பால்கனி பக்கமாய் வந்த 
வெண்ணிலாவிடம் 
நீ தானே 
அவளை பார்த்துவரச் சொன்னாய் 
அங்கு ஓரே மழை 
மேகம் தலை துவட்டிக் கொண்டிருக்க 
எதோ ஒரு குரலுக்கு 
இதோ வருகிறேன் யென்ரு வெண்ணிலா செல்ல 
மழையில் நனைந்தவளின்
கூந்தலின் ஈரத்தை
உயிரில் தெளித்துவிட்டுச் சென்றது
பின்னால் வந்த காற்று

-செய்தாலி

7 comments:

  1. // மேகம் தலை துவட்டிக் கொண்டிருக்க ... //

    வர்ணனைகள் பிரமாதம்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அனுபவிக்க வைக்கும் வரிகள்!
    அழகு!
    வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  3. சீக்கிரம் தலை துவட்ட சொல்லுங்க அவங்களை!! ஜலதோசம் பிடிச்சுட போகுது..,

    ReplyDelete
  4. நீண்ட நாட்களின் பின்னொரு சிறப்பான வரிகள்
    தொடர வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete
  5. அருமை அருமை
    கவிதையில் கற்பனையில்
    அற்புதமாய்ச் சொன்னவிதத்தில்
    சொக்கிப்போனது மனது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. இனழய காதல் வரிகள்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...