Tuesday, July 2, 2013

மரங்கள்



*மரங்களை 
வரைந்து கொண்டிருந்தேன் 
மழையை தூவிச் சென்றது காற்று



*தொப்பலாய் நனைந்ததில் 
 மேலாடை விலகியதறியாது 
வீதியில் நிற்கிறது வெட்கமில்ல மரங்கள் 




*கொலையுண்ட மரம் 
சலசலப்பு ஒப்பாரியில் 
சபித்தபடி பறந்தன பறவைகள் 



*காற்று
இறந்த வீதியில்
மௌன அஞ்சலி செய்கிறது மரங்கள் 



*வீதியோரங்களில் 
வெட்கையில் இறந்த  குழந்தைகளை 
மடியில் ஏந்தி நிற்கிறது தாய்மரங்கள் 

9 comments:

  1. // தொப்பலாய் நனைந்ததில்
    மேலாடை விலகியதறியாது
    வீதியில் நிற்கிறது வெட்கமில்ல மரங்கள் //

    ரசித்தேன் இவ்வரிகளை...

    ReplyDelete
  2. அருமை...

    சிந்திக்க வேண்டிய வரிகளும் கூட...

    ReplyDelete
  3. பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  5. மரங்களை
    வரைந்து கொண்டிருந்தேன்
    மழையை தூவிச் சென்றது காற்று
    >>
    வரைந்ததுக்கே இப்படின்னா?! மரம் வளர்த்தால்?!

    ReplyDelete
  6. மிகவும் சிறப்பான வரிகள் மேலும் தொடர
    வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  7. அருமை... ரசித்தேன்.... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. மரங்கள் பற்றி மிகவும் அழகான கவிதைகள்.... கலக்கல்...

    ReplyDelete
  9. அனைத்தும் அருமை

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...