Sunday, September 29, 2013

தொட்டி மீன்கள்

















 நாளை 
இறந்து மிதக்கும் 
தொட்டி மீன்கள் என்று 
சற்றென
வெறுமையை கீழிட்டு உடைத்து
சொல்முடிச்சிட்டு
அரை நாழிகைவரை
நெய்யத்தொடங்கிவிட்டான் நண்பன்
வெறுமையின் கனவீழ்ச்சியில்
நொறுங்கி விழுந்த
மனக் கண்ணாடியின் பிம்பத்தில்
நிறத்தில், குணத்தில்
உருவத்திலென
அக்கரைத் தொட்டியில்
நீந்திக் கொண்டிருந்தது மீன்கள்
சிதறிய சில்லுகளில் தேடிக்கொண்டிருந்தேன்
என் நிறசாயலுள்ள மீனை

4 comments:

  1. அருமை.!இப்படியான தேடல்களுடனே தொடர்கிறது வாழ்க்கை!வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
  2. கவிதை அருமை.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...