Thursday, December 11, 2014

இரண்டு காட்சிகள்

கால்கடுக்க
வாசலில்  எதிர்பார்த்து நிற்கிறாள்
குழந்தை அழும் சத்தம் கேட்கிறது
உள்ளே ஓடுகிறாள்
வெளியே வருகிறாள்
முக்குக் கடையில் 
ஒரு பால் பாக்கெட் வாங்கி வரச்சொல்கிறாள்
தெருவில் விளையாடும் சிறுவனிடம்
நேரம் கடந்தது
சிறுவன் வந்தான்
பால் பாக்கெட்  தீர்ந்து விட்டதாக சொல்கிறான்
பக்கத்துக் கடையில் கேட்டியா
அங்கேயும் இல்லை  என்றும் 
பாக்கத்து ஊருக்குத்தான் போகணும் என்றான்
அழுவதை நிறுத்துவதாக இல்லை  குழந்தை
சீனித் தண்ணீரை வாயில் தொட்டு வைத்து
குழந்தையை சற்று நேரத்திற்கு உறங்கச் செய்துவிட்டாள்
மீண்டும் வெளியே வந்தாள்
இளவெட்ட பசங்க சிலர்
வேகமாக பைக்கில் போயிக்  கொண்டிருந்ததை பார்த்தாள்
சற்றே தூரத்தில் இருக்கும் ஒரு சின்ன நகரம்
அங்கேயே நிற்பர்களும்
வீதியில் போவோரும் வருவோரும்
எதோ ஒரு அறையப்பட்ட உருவத்தை அண்ணாந்து பார்க்கிறார்கள்
கூடி நிற்பவர்கள் கரவோசையையும்  
விசில் சத்தத்தையும் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்
சதசதவென கீழே ஈரமாகிக் கொண்டிருந்தன
வழியும் அந்த நீர் வெள்ளை நிறத்தில் இருந்தது
அது என்னவென்று கேட்காதீர்கள்
இதேபோல் எதோ ஒரு வீதியில் யாரோ ஒருத்தி நிற்கிறாள்
வேறொரு நிலமும் ஈரமாகிறது 
அங்கு நானும் நீங்களும்
நிற்கிறோம் வேடிக்கை பார்த்தபடி

Sunday, December 7, 2014

உயிர் திசை


நடைவழியில்
எறும்புகளுக்கு இரையாகிக் கொண்டிருந்தது
பெயரறியா பறவை ஒன்று
இரை தேடியோ எடுத்தோ
இவ்வீக்கு  வந்திருக்கக்கூடும்
உருவத்தில் தாய் பறவைபோல் தெரிந்தது
சாரை சாரையாய் வந்த எறும்புகள்
இழுத்துச் சென்றுகொண்டிருக்க
கொழிந்து விழுந்த ஓர் இறகு மட்டும்
எதிர் திசைநோக்கி பறக்க  ஆரம்பித்தது
குஞ்சுகள் பசித்திருக்கும்
அப்பறவையின் கூடு அத்திசையில் இருக்கலாம் 

Tuesday, September 2, 2014

கயமம்பின்னிரவுகளில் 
அவனுக்கு தாகிக்கலாம் யென்று 
ஒரு குவளை நிறைய 
கண்ணீரை பத்திரபடுத்தி வைத்திருக்கிறாள் 
உணர்வுகள் கொலையுண்ட ஒருத்தி

Wednesday, March 12, 2014

ஆயுதம்


கொல்லபுரத்தில்
வீசி எறிந்துவிட்டு 
உள்நுழைகிறான் 
ஒப்பாரியின் கடைசி முனங்கல் 
உருகுலைந்த அறையை சுற்றிக் கொண்டிருந்தது 
கரங்களில் வழிந்து சொட்டும் குருதித்துளிகள் 
மிதியிடங்களில் உறைந்து கிடந்தது 
நேற்றுவரை அதை
பூஜை அறையில்வைத்து கொண்டாடியிருந்தான்Tuesday, February 11, 2014

பின்துரத்தல்வீதிகளை
அவ்வளவு எளிதாய்
கடக்க முடிவதில்லை
புன்னகை 
துக்கம் 
கண்ணீர் 
மௌனம் ......இப்படி
எதோ ஒன்று சலனம் செய்தபடி 
பின்துரத்துகிறது 

Monday, January 13, 2014

நதியொன்று
ஒரு ஊருக்கு வெளியே 
நதியொன்றுஓடிக்கொண்டிருந்தது 
ஒருசிலர் தாகம் தனித்தும் நீராடியபடியும் 
அவ்வப்போது வந்து சென்றுகொண்டிருந்தனர் 
மற்று சிலர் நீரள்ளி சற்றே தூரமுள்ள 
சில குட்டைகளில் நிரப்பிக்கொண்டிருந்தார்கள் 
ஒருசிலரோ அவரவர் திசைநோக்கி 
கால்வாய்களை தொண்டிகொண்டிருந்தார்கள் 
சிலர் ஊருக்கு எல்லையில் அணைகட்டி
நதியை சிறைபடுத்திக் கொண்டிருந்தனர்
பிந்திய நாளொன்றில் பெருமழை பெய்தது
அப்போதும் நதி ஓடிகொண்டிருந்தது
வழக்கம்போல் ஒருசிலர்
வந்து சென்றுகொண்டிருந்தார்
அந்த ஊர் மற்றும் காணாமல் போயிருந்தது 

Thursday, January 9, 2014

அந்த உண்மை


உறவுகளோடு 
திளைத்திருந்த அந்தியில் 
ஓர் பறவையை சொல்லி 
அதை வரைந்து கேட்டது குழந்தைகள் 
நானும் வரைந்து கொடுத்தேன் 
ஒரு புன்சிரிப்போடு 
அப்போது அவர் அருகில்தான் இருந்தார் 
பிந்திய நாளொன்றில் 
யாருக்காவோன ஒரு 
காத்திரிப்பின் சலிப்பில்
கையிலிருந்த வெற்றுக் காகிதத்தில்
ஓர் பறவை எதுவென்று ஞாபகமில்ல
வரைய தொடங்கிருந்தேன்
இதை வரையாதீர்கள் யென்ரு
சற்றென குறுக்கிட்டார்
அன்று மௌனமாய் அருகிலிருந்தவர்
ஏனென்றேன்
ஒரு எதிர் கேள்வி கேட்டவர்
ஓர் காரணத்தையும் சொன்னார்
முழுமையற்ற அச்சித்திரத்தை
கிறுக்கலிட்டு சிதைத்துக் சிதைத்துக் கொண்டிருந்தேன் 


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...