Monday, January 13, 2014

நதியொன்று




ஒரு ஊருக்கு வெளியே 
நதியொன்றுஓடிக்கொண்டிருந்தது 
ஒருசிலர் தாகம் தனித்தும் நீராடியபடியும் 
அவ்வப்போது வந்து சென்றுகொண்டிருந்தனர் 
மற்று சிலர் நீரள்ளி சற்றே தூரமுள்ள 
சில குட்டைகளில் நிரப்பிக்கொண்டிருந்தார்கள் 
ஒருசிலரோ அவரவர் திசைநோக்கி 
கால்வாய்களை தொண்டிகொண்டிருந்தார்கள் 
சிலர் ஊருக்கு எல்லையில் அணைகட்டி
நதியை சிறைபடுத்திக் கொண்டிருந்தனர்
பிந்திய நாளொன்றில் பெருமழை பெய்தது
அப்போதும் நதி ஓடிகொண்டிருந்தது
வழக்கம்போல் ஒருசிலர்
வந்து சென்றுகொண்டிருந்தார்
அந்த ஊர் மற்றும் காணாமல் போயிருந்தது 

4 comments:

  1. நீண்ட நாட்களின் பின்னரும் தங்கள் கவிதை வரிகளைக் கண்டு
    மகிழ்ந்தேன் .சிறப்பான வரிகளுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
    சகோதரா .

    ReplyDelete
  2. எதுவும் கடந்து போகும்...!

    ReplyDelete
  3. Haa haaa...!

    Nalla kavithai...

    ReplyDelete
  4. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...